அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாதெனக் கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் அசல் எனத் தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவ மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
