Our Feeds


Monday, August 19, 2024

Sri Lanka

நான் பிரச்சினைகளைக் கண்டு தப்பியோடுபவன் அல்ல - சஜித்!


தான் பிரச்சினைகளிலிருந்து தப்பிச் செல்வதில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான சவால்களில் முன் நிற்கிறேன். வேறு வேட்பாளர்களைக் களமிறக்கி கட்சியின் தலைமைத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற நிலைப்பாட்டில் தான் இருக்கவில்லையென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலுக்காக, திருடர்களுடன் டீல் இல்லாத  அரசியல் ஒப்பந்தங்களுக்காக மக்களைக் காட்டிக் கொடுக்காத மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களை மறந்து விடாத நன்றிக் கடன் அறிந்த ஒரு யுகத்தை உருவாக்கி, அந்த யுகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களைப் போஷிக்கும் சுவர்ண மயமான காலமாக மாற்றி  திருடர்களைப் பிடிக்கின்ற யுகமாக  மாற்றுவோம். திருடர்கள் மோசடிக்காரர்கள்  ஊழல்வாதிகள் ஆகியோருடன் தமக்கு டீல்  இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள்  கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »