தாய்லாந்தின் புதிய பிரதமாராக பேடோங்டர்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரு நாட்களுக்கு அரச நெறிமுறை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேட்டோங்டர்ன் பெயரை ஆளும் பியூ தாய் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், இன்று இடம்பெற்றபாராளுமன்ற வாக்கெடுப்பில் பேடோங்டர்ன் வெற்றி பெற்று தாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.