Our Feeds


Monday, August 19, 2024

Sri Lanka

ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறிவிட்டார் - அனுரகுமார திசாநாயக்க!


ஹரீன் மற்றும் மனுஸ நாணயக்காரவை ஜனாதிபதி தனது ஆலோசர்களாக நியமித்துள்ளமை தேர்தல் விதிமுறைகளிற்கு முரணான விடயம் என தேசிய மக்கள்சத்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறிவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தின் போது புதிய நியமனங்களிற்கு தடை விதித்து தேர்தல் ஆணைக்குழு உத்தரவை வெளியிட்டுள்ளது,இந்த உத்தரவை ஜனாதிபதி மீறியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் முன்னைய அமைச்சுகளின் ஆலோசகர்களாக ஜனாதிபதி அவர்களை நியமித்துள்ளார்,இதன் மூலம் அவர்கள் அந்த அமைச்சுகளின் நடவடிக்கைகளில் தலையிடலாம், ஊதியம் பெறலாம்,வாகனங்களை பெறலாம் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்துகின்றனர்,அகிலவிராஜ் உட்பட பலருக்கு ஆலோசகர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசவளங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார்,என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »