கொழும்பு புத்தளம் வீதி மஹாவெவ நகருக்கு அருகில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று (19) தெரிவித்துள்ளது.
மஹாவெவ தனிவெல்ல கோவிலிலிருந்து மஹாவெவ நகரம் வரையான வீதியில் நீர் நிரம்பியுள்ளதாகவும், சில இடங்களில் மூன்று அடிக்கு மேல் நீர்மட்டம் காணப்படுவதால் வீதி மிகவும் ஆபத்தானதான நிலையிலுள்ளதாகவும் புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நிலையம் தெரிவிக்கின்றது.
குளியாபிட்டிய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் மஹாவெவ லுனு ஓயா மற்றும் ஹெமில்டன் கால்வாய் நிரம்பி வழிவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமையினால் குறித்த வீதியில் பயணிப்பதை தற்காலிகமாக நிறுத்துவதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியுமென பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Monday, August 19, 2024
நீரில் மூழ்கிய கொழும்பு - புத்தளம் வீதி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »