ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரன் சார்பில் இன்றைய தினம் (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அவர் சார்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியக் குழு உறுப்பினர் த.சிற்பரன் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக கடந்த 8ஆம் திகதி பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தாவினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.