எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இத்திட்டமானது இன்றிலிருந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேர்தல் வன்முறைகளை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்