அழகாக பேசுகிறார் என்பதற்காகவோ, கோஷமெழுப்புகிறார், சில பைல்களை தூக்கிக் கொண்டு வருகிறார் என்பதற்காகவோ அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க முடியுமா? அவர்களிடமுள்ள திட்டம் என்ன? அவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அஇமக தலைவர் ரிஷாத் பதியுத்தீன் கேள்வியெழுப்பினார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரிஷாத் கலந்து கொண்ட கூட்டத்தில் மேலும் உரையாற்றும் போது இந்நாட்டை மீண்டுமொரு இருட்டு யுகத்திற்கோ, அரகலய யுகத்திற்கோ, பெட்றோல், டீசல் வரிசைக்கோ கொண்டுபோக வேண்டுமா எனக் கேட்கிறேன். என்றார்.