Our Feeds


Monday, August 19, 2024

SHAHNI RAMEES

ரணிலுக்கு தான் கேஸ் சிலிண்டர் - தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம்..!

 



ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் லான ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இது குறித்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தனர்.


2023ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது அமைப்புக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறித்த சின்னம் தங்களது கட்சிக்குச் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தங்களது ஜன அரகலய புரவெசியோ கட்சிக்கு உரியது எனவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.


“.. உள்ளூராட்சி தேர்தலின் போது காஸ் சிலிண்டரில் பலர் கேட்டுள்ளனர்.. ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே. மற்றவை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே, பொய்யான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டாம். இவற்றுக்குப் பதில் சொல்வதும் பொய்யானது, ஊடகங்களில் விளம்பரம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள்.


இந்த விடயங்களை ஊடகங்களும் தேர்தல் செய்திகளின் போது அறிந்து கொள்ள வேண்டும் என ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இல்லாவிட்டால், இங்கு பலர் வந்து மைக்கை பிடித்து, பேசத் தொடங்கினால் எல்லோரும் மேதைகள்…” என்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »