தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டி மல்வத்து பீட மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஊழல் மோசடி இடம்பெற்றமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் எம்மிடம் உள்ளன.
எனினும் இது தொடர்பில் பரிசோதனை நடத்துவதற்கான அரசாங்கம் ஒன்றே அவசியமாகவுள்ளது.
ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
எனினும் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளுக்கு அரச நிதி பயன்படுத்தப்படுகிறது.
அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே, ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும் ஆளுநர்களாகவும் உள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Saturday, August 17, 2024
ரணில் அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகிறார் - அநுர
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »