Our Feeds


Sunday, August 18, 2024

Sri Lanka

மக்களை ஏமாற்றுபவர்களுக்குத் தக்க பதிலடி கிடைக்கும் - சஜித்


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்துவிட்டு, நாட்டு மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது தேர்தல் நெருங்கும் போது போலியான வாக்குறுதிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இரத்துச் செய்யப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த அனைவரும் பணத்துக்காகவோ பதவிக்காகவோ அல்லாமல் எமது கொள்கைகளை மதித்து எம்முடன் இணைந்துள்ளனர்.

மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்களால் தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »