அரசியல்வாதிகளின் முடிவுகளை விட மக்களின் தீர்மானமே முக்கியமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனது கொடுக்கல் வாங்கல்கள் மக்களுடன் உள்ளன, கொள்கைகளும் மக்கள் சார்ந்ததாகவே உள்ளன. மக்களுக்குச் சேவை செய்வதே எமது நோக்கமாகும்.
அவ்வாறு இல்லாமல், கட்சித் தாவும் அரசியல்வாதிகளுக்குச் சேவை செய்வது எமது நோக்கமல்ல.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து, மீள்வதற்கான வேலைத்திட்டங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்படும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Monday, August 19, 2024
மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கம் - நாமல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »