மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் தொகை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,179 பேருக்கு டெங்கு தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று உறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.