இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராஜமாணிக்கம் ஆகியோர் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர்.
சீனத் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று (12) குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
சமகால அரசியல் மற்றும் தற்போதைய முக்கிய நிகழ்வுகள் தொடர்பாகவும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் சினேகபூர்வமாக கலந்துரையாடபட்டமை குறிப்பிடத்தக்கது.