தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகத் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டது.இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது, தென்னிலங்கையிலிருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து ஒருமித்து முடிவெடுப்பது மற்றும் தேர்தல் பிரசாரம் என்பன தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tuesday, August 27, 2024
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் ஓரிரு தினங்களில் வெளியாகும்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »