தாய்வானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கம் பூமியில் இருந்து 9.7 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும், இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் பதிவாகவில்லை.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.