Our Feeds


Sunday, September 22, 2024

Admin

கோட்டா வெற்றியீட்டிய 16 மாவட்டங்களில் 15 ஐ வென்றார் அநுர



2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று எண்ணின் முடிவின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்..


அதனடிப்படையில் அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பத்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 15 மாவட்டங்களில் திஸாநாயக்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


சஜித் பிரேமதாச ஏனைய 7 மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னிலை வகிக்கின்றார்.


2019 தேர்தலில் சஜித் வெற்றிபெறாத பதுளை மாவட்டத்தில் இம்முறை முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்த 16 மாவட்டங்களில் ஒன்றைத் தவிர 15 மாவட்டங்களிலும் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளமை சிறப்பம்சமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »