Our Feeds


Sunday, September 1, 2024

Sri Lanka

கோட்டா எம்மை நடுக்காட்டில் கைவிட்டார் - சஜித்தும், அனுரவும் சுற்றிப்பார்த்து விட்டு ஓடிவிட்டார்கள் - சம்மாந்துறையில் முஷர்ரப்



"2022 இல் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வாகனத்தில் நாம் ஏறிச் சென்றோம். ஆனால் நடுக் காட்டில் எங்களை அவர் கைவிட்டார். அதிலிருந்து மீட்க அனுர குமாரவும், சஜித்தும் அங்கு வந்தனர். அவர்களிடம் வாகனத்தை ஏற்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கோரினார்.  ஆனால் அவர்கள் இருவரும் மறுத்துவிட்டனர். புதிய வாகனத்தை தந்தால் மட்டுமே அவர்கள் ஓட்டத் தயாராக இருந்தனர். வாகனத்தை சுற்றிப் பார்த்துவிட்டு ஓடிவிட்டனர்.  


ரணில் விக்ரமசிங்க என்ற முதிர்ந்த மெகானிக் அந்த இடத்திற்கு வருகிறார். அவர் அனுபவம் நிறைந்த மெகானிக். அவருக்கு ஒருபோதும் நாட்டு மக்கள் முழுமையான அதிகாரத்தை வழங்கவில்லை.  மைத்திரிபால சிறிசேன போன்றவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கிவிட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு சில அதிகாரங்களை மட்டுமே மக்கள் வழங்கினர்.


நடுக்காட்டில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களை மீட்குமாறு கோரினர். ஜனாதிபதியும் அவர்களை மீட்டு காட்டைக் கடந்து செல்ல வீதியை நெருக்கு வரும்போது, முதலில் வாகனத்தை விட்டு ஓடிய அனுரவும் சஜித்தும் வாகனத்தை திருத்துகிறோம் என்று கேட்கிறார்கள். 


ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏடுகள் குறைவாக இருக்கலாம். ஆனால் அதற்குள் இருக்கின்ற விடயங்கள் வலுவானவை. எதிர்கட்சியினர் வரியை குறைப்போம் என்கின்றனர். கோட்டாவின் இரண்டாம் பாகம் போல அனுர செயற்படுகிறார். இவர்கள் வெனிசுலா, கிரீஸ் போன்ற நிலையை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியொரு எம்.பியாக பாராளுமன்றத்திற்கு வந்தபோதே பொருளாதார சர்தேச நாணய நிதியத்திடம் சென்று உதவி கோராவிட்டால் நாடு வங்குரோத்தாகும் என்று எதிர்வு கூறினார். அதனை கருத்தில் கொள்ளாத காரணத்தினாலேயே நாடு வங்குரோத்தடைந்தது. இனியும் அந்த தவறுகளை செய்யக்கூடாது." என்றார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »