ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியாக புலனாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக அந்த பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பில் உறுதி செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட வேலைத் திட்டத்தின்கீழ் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.