ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் இதனை பதிவு செய்துள்ள அவர்,நாங்கள் இணைந்து அனைவரும் வெற்றிபெறும், இனவெறியில்லாத பாரபட்சம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.
ஐக்கியம் வலு பகிர்ந்துகொள்ளப்பட்ட நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.