பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு மற்றும் உதவித்தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மஹபொல புலமைப்பரிசில் தொகையை ரூ. 7,500 ஆகவும் பர்சரி தொகையை ரூ. 6,500 வரையும் அதிகரிக்கவுள்ளதுடன் இது ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வருகிறது.
இத்தொகையை அதிகரிக்குமாறு கல்வியமைச்சர் வர்த்தக அமைச்சர் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து கூட்டுப் பிரேரணையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.