விஜித ஹேரத் ஊடக அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய ஊடக அமைச்சராக நியமனம் பெற்ற விஜித ஹேரத் இன்று (25) காலை ஊடக அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஊடக அமைச்சுடன் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து, பொதுமக்கள் பாதுகாப்பு, வெளிவிவகாரம், சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை ஆகிய அமைச்சுக்களின் அமைச்சராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.