களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
களுத்துறையில் பயாகல, அயகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்ட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்தவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தபால் உத்தியோகத்தர் 11 நாட்களுக்கு மேலாக விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் நேற்று (18) காலை களுத்துறை பிரதான தபால் நிலையத்திலிருந்து பயாகல உப தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றதாகவும் விருப்பமுள்ளவர்கள் தபால் நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, September 19, 2024
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »