Our Feeds


Thursday, September 12, 2024

Zameera

முச்சக்கரவண்டி மோதியதில் கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு


 கர்ப்பிணித் தாய் தனது இரண்டரை வயது மகனுடன் இன்று வியாழக்கிழமை (12) காலை வீதியில் சென்றுகொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் குறித்த கர்ப்பிணித்தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அம்பாந்தோட்டை - வெல்லவாய பிரதான வீதியில் பல்லேமலல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தின் போதே குறித்த கர்ப்பிணித்தாய் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

 

பல்லேமலல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய கர்ப்பிணித்தாயே உயிரிழந்துள்ளார்.

 

விபத்தின் போது, கர்ப்பிணித் தாயும் இரண்டரை வயது மகனும் காயமடைந்துள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கர்ப்பிணித் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து, முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »