தபால் திணைக்களம் 10 மில்லியனுக்கும் இதுவரை விநியோகித்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க நேற்று (10) தெரிவித்தார். மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்த சில நாட்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.
வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 14ம் திகதிக்குள் பூர்த்தி செய்ய தபால் திணைக்களம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 14 ம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையாயின் அடையாள அட்டையுடன் அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று அடையாளத்தை சரிபார்த்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். தேர்தல் நாள் வரை வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கும்.
2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17.44 மில்லியன்.