கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிப்பதாக சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (01) உறுதியளித்துள்ளார்.
"கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிக்கவுள்ளோம். அதற்கேற்ப சிலாபம் நகரம் அபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி துறைகளிலும் கவனம் செலுத்துவோம்" என மாலை சிலாபத்தில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி தெரிவித்தார்.