எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி மாபெரும் கூட்டணியை உருவாக்கப் போவதாக சர்வஜன சக்தி கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
சர்வஜன சக்தி கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வஜன சக்தி கூட்டணியில் இணைந்து கொண்ட கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அங்கு உரையாற்றிய திலித் ஜயவீர,
“பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்கு கேட்கின்றோம். இம்முறை இலங்கையில் செல்வாக்குமிக்க அரசியல் கூட்டணியை உருவாக்குகிறோம். மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பும் அரசியல்வாதிகளை அழைத்துள்ளோம்” என்றார்.