ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை எதுவும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இன்று (10) தெரிவித்துள்ளார்.
"விக்கிரமசிங்க முன்னிலைப்படுத்தியது என்னவென்றால், NPP யானது எதிர்க்கட்சியின் பலவீனத்தால் SJB ஐ முறியடித்து சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாகும் என்பதாகும்" என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.