சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களிலும், கொலன்னாவ மற்றும் கடுவல கல்வி வலயங்களிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2 நாட்களுக்கு (14 மற்றும் 15ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.