இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இவர் 01 ஒக்டோபர் 2024 முதல் 31 மார்ச் 2026 வரையிலான காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணி வௌிப்படுத்திய திறமைகளை கருத்திற்கொண்டு சிறிலங்கா கிரிக்கட் நிறைவேற்றுக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த போட்டிகளில் சனத் ஜயசூர்ய இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Monday, October 7, 2024
தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »