பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் தொழிலதிபர் தாரிக் கையெழுத்திட்டார்.
அனுராதபுர மாவட்டத்தில் இரண்டு தடவைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மூலம் போட்டியிட்ட இஸாக் ரஹ்மான் அவர்கள் ஜனாஸா எரிப்பின் போது 20க்கு கையுயர்த்தியதன் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
20க்கு கையுயர்த்தியவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் இணைத்துக் கொள்ளாது என்ற அடிப்படையில் அவரது இடத்தை பூரணப்படுத்த தொழிலதிபர் தாரிக் அவர்கள் ACMC சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அனுராதபுர மாவட்ட வேட்பாளராக இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
Wednesday, October 9, 2024
ஜனாஸா எரிப்புக்கு ஆதரவளித்த இஸாக் ரஹ்மானுக்கு பதிலாக அனுராதபுரத்தில் புது முகம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
