ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணில் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடுவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் நாம் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கின்றோம். அந்தக் கூட்டணியிலேயே நாம் பாராளுமன்றத் தேர்தலையும் முகங்கொடுக்கவுள்ளோம்.
தற்போதைய நிலையில் ஆசன ஒதுக்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அடுத்து வரும் நாட்களில் அது இறுதியாகும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
Sunday, October 6, 2024
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சு தொடர்கிறது - முஸ்லிம் காங்கிரஸ்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »