Our Feeds


Wednesday, October 23, 2024

Admin

VIDEO: நாட்டுக்குத் தேவை சக்தி வாய்ந்த அரசாங்கமே தவிர, எதிர்க்கட்சி அல்ல! - ஜனாதிபதி அனுர



ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கட்டுநாயக்கவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், காலத்தின் தேவை பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த அரசாங்கமே தவிர, எதிர்க்கட்சியல்ல எனவும், எனவே நவம்பர் 14 பொதுத் தேர்தலில் NPP (தேசிய மக்கள் சக்தி) பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை முழுமையாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் NPP வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆதரவை வலுப்படுத்துவதற்காக ஒரு உரையில், உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக ஒரு சக்திவாய்ந்த அரசாங்கத்திற்கு தனக்கு வலுவான ஆணை தேவை என ஜனாதிபதி கூறினார்.


நாட்டின் நலன்களுக்கு பாதகமான வகையில் கடந்த காலங்களில் பல உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  


"அதற்கெல்லாம், எங்களுக்கு ஒரு வலுவான அரசாங்கம் தேவை. அடுத்த பாராளுமன்றம் தூய்மையானவர்களால் நிரப்பப்பட வேண்டும். NPP யினரைத் தவிர அது வேறெதுவுமாக இருக்கக் கூடாது ”என்று அவர் கூறினார்.  


புதிய அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் கவிழும் என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், அவை மெத்தனப் போக்கிற்காக பகல் கனவு காண்கின்றன என்றும், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வரை தனது அரசாங்கம் தடையின்றி முன்னேறும் என்றும் கூறினார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »