சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், (Krishna Srinivasan) சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் (Dr. Peter Breuer) உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் IMF பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேநேரம், மக்கள் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழியில் செல்வதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கமாகும்.