பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்கு
இடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது.புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk நேற்று (27) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொலிஸாரின் நடவடிக்கைகளின் பகிர்வதைத் தவிர, பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்யவும், மேலதிக புதிய அம்சங்களுடன் இந்த இணையத்தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய இணையத்தளத்தில் இன்னும் பல புதிய விடயங்களை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது