Our Feeds


Thursday, December 5, 2024

Zameera

நிரந்தர காணி உரிமைதான் தீர்வு: ஜீவன் தொண்டமான்


 "மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்படும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களின் போது, நாம் மீண்டும் மீண்டும் பேசும் ஒரே விடயம் எவ்வாறு பாதிகப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்குவது, உடைந்த வீடுகளை எவ்வாறு மீள கட்டுவது இது தொடர்பாகவே பேசுகின்றோம். ஆனால் இவை அனைத்திற்குமான ஒரே தீர்வு மக்களுக்கான நிரந்தர காணி உரிமையினை பெற்றுக்கொடுப்பதே ஆகும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்."


கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் நேற்றையதினம்(04) கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே மேற்கன்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.


பத்தாவது பாராளுமன்ற அமர்வில்,  கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று(04) மாலை 5:30 மணி தொடக்கம் இரவு 9:30 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றிருந்திருந்தது.


இதில் கலந்துக்கொண்ட நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.


முதலில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்படும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களின் போது, நாம் மீண்டும் மீண்டும் பேசும் ஒரே விடயம் எவ்வாறு பாதிகப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்குவது, உடைந்த வீடுகளை எவ்வாறு மீள கட்டுவது இது தொடர்பாகவே பேசுகின்றோம். 


ஆனால் இவை அனைத்திற்குமான ஒரே தீர்வு மக்களுக்கான நிரந்தர காணி உரிமையினை பெற்றுக்கொடுப்பதே ஆகும்.


மேலும் ஆளும் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, எதிர்க் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, நாம் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கெளரவ ஜனாதிபதி அவர்களின் கட்சியில் என்ன தான் அரசியல் வேறுபாடு, கொள்கை ரீதியிலான மாற்றங்கள், நோக்கங்கள் வேறுபட்டு காணப்பட்டாலும், நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து பயணிக்கவே அவர் விரும்புகின்றார்.


ஆகவே, நாம் அனைவரும் இந்தச் சபையில் ஐந்து வருடங்கள் ஒன்றாக பயணிப்போம். இனவாதத்தை தூண்டுபவர்களுக்கும், இனவாதிகளுக்கும் இடம் வழங்காமல் அரசாங்கத்திற்கு  தேவையான நேரங்களில் ஆதரவினை வழங்கி செயற்படுவோம் என்று தனது உரையினை நிகழ்த்தி இருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »