Our Feeds


Friday, December 13, 2024

Sri Lanka

கலாநிதி பட்டம் குறித்து பாராளுமன்றம் விளக்கம்!

பாராளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டமை, குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும்போது ஏற்பட்ட தவறினால் ஏற்பட்டதாக இலங்கை பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றம் இதனை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பாராளுமன்றத்திற்கு வழங்கிய தகவல் பத்திரத்தில் கலாநிதி என்ற பட்டம் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் படி, மேற்படி தவறினை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்  ஹர்ஷன நாணாயக்காரவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு இலங்கை பாராளுமன்றம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.

மேலும், பாராளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருவதாக இலங்கை பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »