Our Feeds


Tuesday, January 21, 2025

Admin

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை - நாமல் கருணாரத்ன!



நெல்லுக்கான உத்தரவாத விலைக்கு பதிலாக எதிர்காலத்தில் குறைந்தபட்ச விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடைவள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நெல் உற்பத்திக்கான விலையை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து நெல் உற்பத்திக்கான விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த விலைக்கேற்பவே நெல் கொள்வனவு இடம்பெறும். அத்துடன் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையும் நிர்ணயிக்கப்படும்.

நெல் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் நெல்லுக்கான செலவினத்தைக் குறைத்து ஆலைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இலாபம் ஈட்டக் கூடிய வகையில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும்.

அத்துடன், ஒரு கிலோ அரிசியை சாதாரண விலையில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் விவசாய மற்றும் கால்நடைவள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »