எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என்பது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015, 2016 மற்றும் 2017 காலப்பகுதியில் செய்வதற்றை 2023, 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பித்தவற்றை முன்னெடுத்து செல்வதை போன்றே இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்கின்றோம். அவற்றின் கொள்கைகளை மீறாமல் நிதி ஒழுக்கம் தெளிவாக உள்ளது. இது நாட்டுக்கு பொருத்தமானது. அப்போது ஆரம்பிக்கப்பட்ட விடயங்களையே முன்னெடுத்துச் செல்கின்றனர். மாற்றமில்லாத கொள்கையே இருக்கின்றது. நாங்கள் அன்று அரசாங்கமாக ஆரம்பித்து கொண்டு சென்றவற்றை இவர்கள் கொண்டு செல்கின்றனர். இது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம்
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அன்று நாங்கள் ஆளும் கட்சியில் இருந்துகொண்டு முன்னெடுத்த கொள்கையை தற்போது அரசாங்கம் எந்த மாற்றமும் இல்லாமல் கொண்டு செல்கிறது. கொள்கை ரீதியில் நாங்கள் வரவேற்கிறோம்.
அதேநேரம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பாக 15ஆயிரம் அதிகரித்திருப்பது 3 வருடங்களுக்காகும். அரசாங்கத்தினால் தாங்கிக்கொள்ள முடியாததாலே இத 3 கட்டங்களுக்கு பிரித்திருக்கிறது. புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை என்றார்.