ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிரான வழக்கு காணொளி தொழில்நுட்பம் ஊடாக விசாரிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிரதிவாதிகள் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக் காவலிலிருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தமை மற்றும் உதவி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
நீதிமன்றத்தின் சமர்ப்பணங்களை முன்வைத்த அரச தரப்பு சட்டத்தரணி, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பிரதிவாதி இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார் எனத் தெரிவித்தார்.
ஸ்கைப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கை விசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அரச தரப்பு நீதிமன்றத்தைக் கோரியது.
இது தொடர்பாக எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் எனக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க உத்தரவிட்டுள்ளார்.
Thursday, February 27, 2025
ஹரக் கட்டாவின் வழக்கு விசாரணை ஸ்கைப் மூலம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »