ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்புக்கமைய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (18) பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்போது, லாஹூர் பிராந்திய கொன்ஸல் ஜெனரல் யாஸின் ஜோயிஆ தலைமையில் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள வர்த்தகத் தூதுக் குழுவினர் வர்த்தகத் துறையில் இந்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடினர்.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உல்லாசப் பயணத்துறை தொழிலாண்மை என்பவற்றை மையப்படுத்தியதாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பங்கேற்றனர்.
Wednesday, February 19, 2025
மு.கா முக்கியஸ்தர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »