Our Feeds


Saturday, February 22, 2025

Admin

என்கவுன்டர்கள் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறையல்ல - சாலியபீரிஸ்!


பொலிஸாரின் என்கவுன்டர் கொலைகள் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறையல்ல என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் என்கவுன்டரில் ஈடுபட்ட பொலிஸார் அதற்கான விளைவுகளை எதிர்நோக்கவேண்டிய நிலையேற்படலாம் என எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பொலிஸாரின் என்கவுன்டர் கொலைகள் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறையல்ல.

பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸாரின் பிடியில் உள்ளபோது சந்தேகநபர்கள் கொல்லப்படுவது குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் குறித்த ஆதாரங்களை அழித்துவிடும்.

மேலும் இந்த கொலைகளில் ஈடுபட்ட பொலிஸார் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.என்கவுன்டர்களில்  ஈடுபட்ட பொலிஸார் சில வருடங்களின் பின்னர் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும்.

என்கவுன்டர்களில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றங்களில் குற்றச்சாட்டப்படுவதையும்,அவர்களினதும் அவர்களின் குடும்பத்தவர்களின் உயிர்களும் பறிபோவதையும் நான் பார்த்துள்ளேன்.பொலிஸ்நிலையங்களில் ஈடுபட்ட கொலைகளையும் என்கவுன்டர்களையும் உச்சநீதிமன்றம் கண்டித்துவந்துள்ளது.

எந்த அரசாங்கத்தின் கீழும் சட்டத்திற்குபுறம்பான கொலைகளை ஏற்க முடியாது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »