Our Feeds


Tuesday, February 18, 2025

Zameera

O/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின


 2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (17) வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை  பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அழைப்பு இலக்கம் :- 1911

பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை:- 0112784208, 0112784537, 0112785922

தொலைநகல் இலக்கம் :- 0112784422

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »