Our Feeds


Sunday, March 9, 2025

Zameera

முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு தேவை


 முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு தேவை எனவும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க மகளிர் விவகார அமைச்சின் ஒத்துழைப்பும் அவசியம் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (08) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


முன்பள்ளிகளில் மிகவும் குறைந்தசம்பளத்தில் ஆசிரியர்களாக மகளிர்களே கடமையாற்றுகின்றார்கள். இவ்வாறு கடமையாற்று முன்பள்ளி ஆசிரியர்களுடைய ஒருமாத கொடுப்பனவு வெறும் 6,000 ரூபா மட்டுமேயாகும். என்ன செய்வது, எப்படிச்சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றார்கள். இதுதொடர்பில் பலரும் என்னிடம் முறையிட்டுள்ளார்கள்.

இந்த முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்கு மகளிர் விவகார அமைச்சரும் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும். முன்பள்ளி ஆசிரியர்களின் ஒப்பற்ற சேவைக்குரிய கொடுப்பனவு போதுமானதா? சற்று எண்ணிப்பாருங்கள். இந்தவிடயத்தில் அரசு கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மகளிர் விவகார அமைச்சின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றார்.

 


விஜயரத்தினம் சரவணன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »