Our Feeds


Wednesday, March 5, 2025

Admin

இந்தியாவில் நிலநடுக்கம்!


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

மணிப்பூரில் இன்று காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. அடுத்ததாக மதியம் 12.20 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »