Our Feeds


Wednesday, April 9, 2025

Admin

தேர்தல் விதி மீறல் | இதுவரை 13 வேட்பாளர்கள் 42 ஆதரவாளர்கள் கைது..



மார்ச் 3ம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், 42 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் 11 வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.


நேற்று (08) காலை 6 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை வன்முறை சம்பவம் மற்றும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பான 12 சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளன. குறித்த புகாரின் அடிப்படையில், ஒரு வேட்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் மொத்தம் 24 வன்முறை சம்பவங்கள் மற்றும் 99 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸாரிடம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »