Our Feeds


Monday, April 21, 2025

Admin

கத்தோலிக்க திருச்சபை தலைவர் பாப்பரசர் பிரான்ஸிஸ் உயிரிழந்தார் - வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு



கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பெப்ரவரி 14ம் திகதி வைத்தியசாலைக்குச் சென்று, 38 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23ம் திகதியன்று வத்திக்கானுக்கு திரும்பினார்.


நேற்று (20) ஈஸ்ரர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், இன்று காலை பாப்பரசர் உயிர் பிரிந்ததாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 


நேற்றைய ஈஸ்டர் தின நிகழ்வுகளில் சுருக்கமாக பேசிய பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள் காஸாவில் நடைபெற்று வரும் அப்பாவி மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »