Our Feeds


Thursday, May 15, 2025

ShortNews

கனடா வெளியுறவுத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளி!

 

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.



அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.



முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைப் போலவே, மார்க் கார்னி அமைச்சரவையில் ஆண்களுக்கு சமமான அளவு  பெண்களும் உள்ளனர்.



ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் நான்கு பேர் மார்க் கார்னியின் அமைச்சரவை உறுப்பினர்கள்.



அனிதா ஆனந்த் கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார். கனடாவின் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த் (58 வயது), 2019 இல் அரசியலில் நுழைந்தார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »