Our Feeds


Saturday, May 10, 2025

Admin

மக்கள் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார் Dr ஷாபி | கொழும்பில் சிறப்பாக நடைபெற்ற “Dr ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்” நூல் வெளியீடு


மருத்துவர் ஷாபி ஷிஹாப்தீன் - இலங்கை சமூகத்தில் மறவா இடம்பிடித்த பெயராக மாறிவிட்டது. 


ஆம், இனவாதத்தின் கோர முகம். டாக்டர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் அகில உலகுக்கும் தெரிந்தது. மருத்துவ உலகில் துளிகூட உண்மையில்லாத பச்சைப் பொய்யொன்று புனையப்பட்டு மருத்துவர் ஷாபி கைது செய்யப்பட்டார்.


தனிமனிதாக ஷாபி குறிவைக்கப்பட்டாலும் முழு சமூகத்தையும் மாற்று சமூகங்கள் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையை அது உண்டாக்கியது.


சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி சிறைவாசம் அனுபவித்து பின்னர் மீண்டு உண்மையை தொடர்ந்து உலகுக்கு ஒப்புவித்தார் டாக்டர் ஷாபி. 


ஷாபிக்கு நடந்தது பச்சை அநியாயம் என்பதை இன்று இந்நாட்டின் அனைத்து சமூக மக்களும் சப்தமிட்டு சொல்லும் நிலை உருவாகிவிட்டது. 


இந்நிலையில் தான் நேற்று (09.05.2025) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரபல மருத்துவ நிபுணர் ரயீஸ் முஸ்தபா, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித், ஜனாதிபதி சட்டத்தரண பாயிஸ் முஸ்தபா, அஷ்ஷெய்க் அகார் முகம்மத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் அரங்கத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர். 









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »