உலகிற்கு என்னை போன்ற பல கோபக்கார இளம் பெண்கள் தேவை என பிரான்சில் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள கிரெட்டா தன்பேர்க் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க் கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என கற்றுக்கொடுக்கும் வகுப்புகளிற்கு செல்லவேண்டும் என தெரிவித்திருந்தமைக்கு பதில் அளிக்கையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
உலகிற்கு என்னை போன்ற பல கோபக்கார இளம் பெண்கள் தேவை என நான் நினைக்கின்றேன் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் எங்களை சர்வதேச கடல்பரப்பில் வைத்து கடத்தியது,எங்கள் விருப்பத்திற்கு மாறாக தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர் என குறிப்பிட்டுள்ள தன்பேர்க் இந்த பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது எங்களிற்கு தெரியும்,காசாவிற்கு சென்று மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதே எங்களின் நோக்கம்,செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் காசா செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே உலக நாடுகள் செய்யக்கூடிய ஆகக்குறைந்த விடயம் என கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.
கிரெட்டா தன்பேர்க்கினை இஸ்ரேல் பிரான்சிற்கு செல்லும் விமானத்தின் ஊடாக அவரது நாடான சுவீடனிற்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.